Saturday, 4 May 2013

எழுபது வருடங்களாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழும் ஆன்மீகவாதி?

கடந்த ஏழு தசாப்த காலமாக எவ்வித உணவையும் உட்கொள்ளவில்லை என தெரிவிக்கும் இந்திய ஆன்மீகவாதி தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
83 வயதான பரலாட் ஜானி என்ற ஆன்மீகவாதியே இவ்வாறு எழுபது ஆண்டுகளாக உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து தற்போது மருத்துவ ஆய்வாளர்கள் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆன்மீகவாதி ஜானியிடம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் யுத்த களத்திற்கு மிகவும் பயன்தரக் கூடியதென பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வு வெற்றியளித்தல், யுத்த காலத்தில் உணவை உட்கொள்ளாமல் எவ்வாறு போராட்டங்களை தொடர்வது என்பது குறித்து படைவீரர்களுக்கு பயிற்சிகளை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு அஹமதாபாத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 30 மருத்துவர்கள் ஆன்மீகவாதி ஜானியை பரிசோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆன்மீகவாதி தங்கியிருக்கும் அறைகளில் இரண்டு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவர் வெளியில் செல்லும் போது மொபைல் கமராக்களின் மூலம் படமெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இருபத்து நான்கு மணித்தியாலங்களும் மருத்துவ சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருதயம், மூளை மற்றும் ஏனைய முக்கிய உடற்பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வுகளின் மூலம் உணவு மற்றும் நீர் இன்றி மனிதன் உயிர் வாழக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதா என்பதனை வெளிப்படுத்த முடியும் என ஆய்வுக் குழுவின் முதன்மை டொக்டர் ஜீ.இளவழகன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் 22ம் திகதி முதல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறித்த காலப்பகுதியில் ஆன்மீகவாதி ஜானி எந்தவொரு உணவுப் பொருளையும் உட்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறுநீர் கழிப்பதற்காகவோ அல்லது மலம் கழிப்பதற்காகவோ ஜானி ஆர்வம் காட்டவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

எந்த வகை சக்தியைப் பயன்படுத்தி ஜானி உயிர் வாழ்கின்றார் என்பதனை அறிந்து கொள்ளும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தியானங்களின் மூலம் தாம் உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எட்டாவது வயதில் கடவுள் தமக்கு இந்த அரிய சக்தியை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் அநேக இடங்களில் பிரபல்யம் தேடும் நோக்கில் இவ்வாறு போலிப் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment