Tuesday, 5 August 2014

Narendra Modi offers prayers at Kathmandu's Pashupatinath temple

Prime Minister Narendra Modi, who is on a two-day visit to Nepal,  performed a half-an-hour special prayer at the 5th century Pashupatinath temple in Nepal on Monday.

Terrorists seize two more towns in Iraq

CSAT row: Protest to intensify, SP threatens to stall Parliament (UPSC)

The protest against UPSC CSAT intensified on Tuesday despite government's assurance that the marks in English language comprehension skills of the UPSC aptitude test will not be included in the merit list. While the students decided to continue their protest at Jantar Mantar, the Samajwadi Party (SP) threatened to stall Parliament proceedings.

Thursday, 30 January 2014

D-Day Movie - Shruti Hassan’s hot tube


download link :

http://www.metacafe.com/watch/10817096/full_music_launch_of_the_film_d_day_with_huma_qureshi_and_arjun/

கெஜ்ரிவாலை ஆதரித்தவர்கள் பின்வாங்குகின்றனர்

டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலின் அணுகுமுறை பிடிக்காமல், அவருக்கு ஆதரவு அளித்து வந்த சில அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வசைபாடத் துவங்கியுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது, அக்கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் என, கூறப்படுகிறது.

ஏனெனில், ஒரு மாதத்திற்கு முன், டில்லியில் ஆட்சியை கைப்பற்றும் முன், சமூக ஆர்வலர், அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் பலரும், அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றினர். இதனால், அவர் பின்னே, நல்லவர்கள் பலரும் இருக்கின்றனர் என்ற எண்ணம், டில்லி மக்களுக்கு ஏற்பட்டது. அந்த எண்ணம், அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி, 28 சட்டசபை இடங்களைப் பிடிக்க ஏதுவாக இருந்தது. ஆனால், அதற்குப் பின், அக்கட்சியினர் அடிக்கும் கூத்து, உட்கட்சி குழப்பம் போன்றவை, அக்கட்சியின் மதிப்பை சீர்குலைத்து விட்டது.

சர்வாதிகாரன்:

குறிப்பாக, கட்சித் தலைவர், கெஜ்ரிவாலை, எம்.எல்.ஏ., பின்னி, சர்வாதிகாரன் என அழைத்தது, உண்ணாவிரதம் இருந்தது போன்றவை எல்லாம், ஆம் ஆத்மியின் பெருமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ஆம் ஆத்மி, இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவையும், மக்கள் செல்வாக்கையும் இழக்கப் போகிறது. ஏனெனில், டில்லியில் அறிவித்த அறிவிப்புகளில் எதையுமே, கெஜ்ரிவாலால் முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், அண்டை மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களுக்கு கட்சி விரிவதால், கட்சியின் கெட்டப் பெயரும் அதிகரிக்கும் என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.

பொய்யர்:

'தேசபக்த சேனா டிரஸ்ட்' என்ற அமைப்பினர், கெஜ்ரிவாலை இப்போது, பொய்யர் என, அழைக்கின்றனர். அவர்கள் சில காலம், அன்னா ஹசாரேயின் தொப்பியை மறந்து, ஆம் ஆத்மி தொப்பியை வைத்திருந்தனர். இப்போது, அவர்கள் தலையில் மீண்டும், அன்னா ஹசாரேயின், ஊழலுக்கு எதிரான இந்தியா, தொப்பிகள் தான் உள்ளன.மவுலானா அஸ்ரபி என்பவர், கெஜ்ரிவாலை பல மாதங்களாக ஆதரித்து வருகிறார். அவர், ''டில்லி மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பிற மாநிலங்களில் அந்த வாக்குறுதிகளை விற்க தயாராகி விட்டார் கெஜ்ரிவால்,'' என்று கூறியுள்ளார்.

இது போல் தான், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக இருந்த பலரும், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர். காரணம், சொன்னபடி செய்யாதது தான்.